வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது

***பழமொழிகள்***

*எலி தான்போகபாதையில்லை விளக்குமாறையும் இழுத்துக்கொண்டு போகுது*

**எய்தவன் இருக்க அம்பை நோவானேன்**

**வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்**.

**கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா**

**எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்**.

>கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.**

** சோம்பல் இல்லாத் தொழில், சோதனை இல்லாத் துணை.**

**கைவில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?**

**ஆறிலும் சாவு நூறிலும் சாவு**

**காகம் இருக்க பனம்பழம் விழுந்தமாதிரி**

**• கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.**

**• காணாதவன் கண்டால் கண்டதெல்லாம் கைலாசம்!**

**பாம்பை கண்டால் படையும் நடுங்கும் **

**கெடுவான் கேடு நினைப்பான்.**

**மழைக்கால இருட்டானாலும் மந்தி கொப்பிழக்க பாயாது **

**அற்பனுக்கு வாழ்வுவந்தால் அர்த்தராத்திரியிலும் குடைபிடிப்பான் **

**ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைகொரு காலம் வரும்**

**. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு**

**சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.**

**எறும்பூரக் கல் தேயும்**

**தானாடாவிட்டாலும் தன் தசையாடும் **

**ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா**

** தன் கையே தனக்கு உதவி.**

**• அடிக்கிற கைதான் அணைக்கும்.**

** கைக்கெட்டினது வாய்க்கெட்டாத மாதிரி **

**ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமோ**

**ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே**

**அழுதபிள்ளை பால் குடிக்கும் **

**சிறுகக் கட்டிப் பெருக வாழ்.**

தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை**

**ஆனைக்கும் அடி சறுக்கும்**

**பாம்பின் கால் பாம்பு அறியும்.**

**குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?**

**கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்**.

*வேண்டாபெண்டாட்டி கை பட்டா குற்றம் கால் பட்டா குற்றம்

எலி எலி வளையானாலும் தனிமனை வேண்டும்

**இரவல் புடவை அதில கொய்யம்வேற**

**அடி இல்லாவிட்டால் அண்ணன் தம்பி உதவார்**

**இரக்கப்போனாலும் சிறக்கப் போ*

*கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்*

**சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.**

**சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்**.

**சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது**

**சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்**.

> சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?**

** தடியெடுத்தவன் தண்டக்காரன்.**

**தம்பியுள்ளான் படைக்கஞ்சான்**

**தன் வினை தன்னைச் சுடும்.**

** தனிமரம் தோப்பாகாது.**

**தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.**

** தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.**

**தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.**

**நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?**

**நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.**

** நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை்**

கருத்துகள் இல்லை: