வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது

மாட்டிறைச்சி கூட்டுக்கறி

தேவையான பொருட்கள்:

இறைச்சி (எலும்பு இல்லாதது) - 1 கிலோ
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி (தேங்காயெண்ணை)
கருவா - ஒன்று சிறியது
வெங்காயம் - 2 பெரிசு (அல்லது சின்னது 10)
கரம் மசாலா தூள் - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி - 2
மிளகாய்தூள் 2 மேசைக் கரண்டி
பச்சைமிளகாய் - 2
 மல்லித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய்ப்பால் - 4 மேசைக்கரண்டி
ஏலக்காய் 4
கராம்பு . 3
இஞ்சி
உள்ளி .6
கருவேப்பிலை
எலுமிச்சை 1

செய்முறை:

இறைச்சியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணையை காய வைத்து பட்டையைப் போட்டு வெங்காயம் இஞ்சி உள்ளி, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு இறைச்சி , கருவேப்பிலை இலை, கரம் மசாலா தூள், தக்காளியை பொடியாக நறுக்கிப் போட்டு தண்ணீர் விடாமல் பாத்திரத்தை மூடி வேகவிட வேண்டும். பின்பு எல்லா தூள் வகைகளையும் போட்டு கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும் . தண்ணீர் வற்றி கூட்டும், கறியுமாய் இருக்கும் போது தேங்காய்ப்பாலை விட்டு சிறிதுநேரம் கிளறி இறக்கி எலுமிச்சம் சாற்றைவிட்டு பரிமாறவும் .

கருத்துகள் இல்லை: