வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது
கோழி இறைச்சி பிரட்டல் (chicken roast)

தேவையானவை
கோழி 1(15அ 20 துண்டுகளாக நறுக்கியது )
மிளக்காயத்தூள் 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
மிளகு தூள் 2 தேக்கரண்டி(கரகரப்பாக பொடித்தது )
மல்லித்தூள் 1தேக்கரண்டி
பச்சைமிளகா 3 (பொடியாக நறுக்கியது )
இஞ்சி 3 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது )
உள்ளி 3 தேக்கரண்டி(பொடியாக நறுக்கியது )
கரம்மசாலா 1தேக்கரண்டி
வெங்காயம் அரைக்கிலோ (பொடியாக நறுக்கியது )
எலுமிச்சை 1
தக்காளி 3
எண்ணெய் பொரிக்கதேவையான அளவு
கருவேப்பிலை

முதலில் இறச்சியுடன் எலுமிச்சம் சாறு மிளகு சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து பதினைந்து நிமிடம் ஊறவிடவும். பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி மிளகாய்த்தூள்,
அரைதேக்கரண்டி மாஞ்சள்தூள், சிறிதுமிளகுதூளுடன் சிறிது தண்ணீர் விட்டுஇறைச்சிஉடன் நன்றாக கலந்து வைத்துவிட்டு, எண்ணெயை சூடாக்கி நன்றாக முருகவிடாமல் பதமாக பொரித்துதெடுக்கவும். அடுத்து இன்னொரு பாத்திரத்தில் பொரித்தஎண்ணையில் 3 மேசைக்கரண்டிவிட்டு இஞ்சி, உள்ளியை போட்டு பின் பச்சை மிளகாய், வெங்காயமும் போட்டு நன்றாகவதங்கி வரும்போது மீதியுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் ,தக்காளி, உப்பு, சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் கரம்மசாலாவையும் கருவேப்பிலையும் சேர்த்து அதனுடன் இறச்சியையும் இட்டு நன்றாக சேர்த்து பிரட்டி எடுத்து பரிமாறவும்.