வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது

கோழிக்கறி சமோசா

தேவையானப் பொருட்கள்

மைதா - அரை கிலோ
கோழிக்கறி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கல் உப்பு - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு கப் துருவல்
கறிவேப்பிலை - சிறு கொத்து
மல்லித்தழை - சிறு கொத்து
பட்டை - 2 சிறு துண்டுகள்
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் - சிறிது
எண்ணெய் - அரை கிலோ
டால்டா - 100 கிராம்


செய்முறை

  • மைதா மாவில் 2 தேக்கரண்டி கல் உப்பை முக்கால் கப் தண்ணீரில் கரைத்துஊற்றி அத்துடன் 100 கிராம் டால்டாவை உருக்கி ஊற்றி பூரிமாவு போலபிசைந்து வைக்கவும்.
  • பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் பொடி செய்யவும், வெங்காயத்தை பொடியாகநறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை, மல்லித்தழையைக் கிள்ளிவைக்கவும்.
  • கோழிக்கறியைக் கழுவி ஆவியில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். அதைஅம்மியில் வைத்து நசுக்கி எடுக்கவும். அரைக்க வேண்டாம்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்புத் தூள் போட்டு பொரிந்ததும், அரிந்தவெங்காயம், கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு வதக்கவும்.
  • அதன் பிறகு கோழிக்கறி போட்டு மிளகாய், மல்லி தூள், மஞ்சள்தூள், 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி, கடைசியாக தேங்காய்த் துருவல் கலந்துகிளறிவிட்டு எடுக்கவும்.
  • மைதா மாவை எடுத்து வட்டமாக பூரி போல செய்து நடுவில் ஒருதேக்கரண்டி கோழி பொடிமாஸ் வைத்து முக்கோணமாக மடித்து ஓரத்தைசிறிது எண்ணெய் தடவி ஒட்டி விடவும்.
  • இப்படி எல்லா மாவையும் செய்து வைத்துக் கொண்டு அடுப்பில் வாணலிவைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒரு தடவைக்கு 5 அல்லது 6 சமோசாக்களைப் போட்டு நிதானமாக பிரட்டி விட்டு பொரித்து எடுக்கவும். அறுசுவை .காமிலிருந்து

கருத்துகள் இல்லை: