வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது

உருளைக்கிழங்கு போண்டா

தேவையானப் பொருட்கள்

உருளைக்கிழங்கு - ஒரு கிலோஉருளைக்கிழங்கு போண்டா தேவையானப் பொருட்கள் ;பெரிய வெங்காயம் - கால் கிலோ
கடுகு - சிறிது
சீரகம் -சிறிது
பச்சைமிளகாய் - 8
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

கரம்மசாலா - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடலைமாவு - ஒரு கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
அப்பச்சோடா - ஒரு தேக்கரண்டி
அரிசிமாவு - 250கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை




  • வெங்காயம், பச்சை மிளகாயைக் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்துகொள்ளவும்.
  • அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டுசிறிது கடுகு ,சீரகம் நறுக்கி வைத்தவெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதில் மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்துநன்றாக வதக்கவும்.
  • நன்கு வதங்கிய பிறகு இறக்கி ஆற விட்டு சிறிய சிறிய உருண்டையாகஉருட்டி வைக்கவும்.
  • பிறகு அரிசிமாவு , கடலைமாவு , அப்பச்சோடா ,உப்பு, சேர்த்து பஜ்ஜி மாவுமாதிரி கரைத்து கொள்ள வேண்டும்.
  • இந்த மாவில் உருட்டிய உருண்டைகளை நனைத்து எண்ணெய்யில்பொரித்து எடுத்து வைக்கவும்.

கருத்துகள் இல்லை: